பீகார் மாநிலம் ஒரு மருத்துவமனைக்குள், பிறந்த சில நாட்களேயான ஒரு பிஞ்சு குழந்தையை நபர் ஒருவர் தலைகீழாகப் பிடித்து காற்றில் ஊஞ்சல் போல ஆட்டும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தொப்புள்கொடி கிளிப் கூட இன்னும் விழாத, பிறந்து சில நாட்களேயான ஒரு பச்சிளம் குழந்தையை காலை மட்டும் தலைகீழாகப் பிடித்து தூக்கி, அந்த நபர் காற்றில் ஆட்டுகிறார்.

இதை அங்கிருந்தவர்கள் யாரும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ​பிறந்த குழந்தைகளின் கழுத்து தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகள் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், இப்படி கையாள்வது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் லைக்குகளுக்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இப்படி ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரோடு விளையாடிய அந்த நபர் யார்? அவர் குழந்தையின் தந்தையா அல்லது உறவினரா? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர் மீது பீகார் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.