தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“துரோகம் தலைவிரித்து ஆடுகிறது… நியாயத்தை மீறி நடைபெறும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது” எனக் கூறி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதே கூட்டணியில் இருந்த ஓ.பி.எஸ். விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் வெளியேறியிருப்பது தமிழ்நாடு அரசியல் சூழலை மேலும் சவாலானதாக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நிகழும் இந்த அரசியல் நகர்வு, பல்வேறு காட்சிகளை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.