இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். பொழுதுபோக்கிற்காகப் பல வீடியோக்கள் பகிரப்படும் நிலையில், தற்போது ஒரு நபர் தண்டவாளத்தில் நின்று ரயிலையே மிரட்டும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு, ரயில் வருவதைப் பார்த்தும் அசராமல், ரயிலை ஓட்டி வருபவரைத் தள்ளிச் செல்லுமாறு சைகை காட்டி அந்த நபர் செய்யும் முட்டாள்தனமான செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை ரயில் ஓட்டுநர் தான் பதிவு செய்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் @rahul225234 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. “இப்படிப்பட்ட காதலர்களை யார் காப்பாற்றுவார்கள்?” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இது போன்ற செயல்களுக்கு ஓட்டுநரின் பொறுமைதான் காரணம்”, “இவர்கள் போன்றவர்களின் மனநிலை சரியில்லை” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
अब ऐसे आशिकों को कौन बचाए जो चलती गाड़ी के सामने आ जाते हैं 😳 pic.twitter.com/2rhWJbLSrS
— Rahul Patel (@rahul225234) June 18, 2026
“>
தற்கொலை முயற்சியோ அல்லது கவனக்குறைவோ, எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் உயிரைப் பணையம் வைத்துச் செய்யப்படும் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது என்பதைப் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.
