இந்தியப் பெரு வணிக உலகில் 2025-2026 நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த லாப விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. நாட்டின் முன்னணி மற்றும் ஜாம்பவான் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டாப் 10 பட்டியல், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டு கோடிக்கணக்கில் லாபத்தை அள்ளியுள்ளன.

வெளிவந்துள்ள இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பாரத ஸ்டேட் வங்கி  சுமார் ரூ. 83,299 கோடி லாபத்துடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து மிரட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 82,390 கோடியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 80,775 கோடியும் லாபம் ஈட்டி முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளதுடன், வணிகச் சந்தையில் தங்களது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளன.

மேலும், எச்டிஎஃப்சி வங்கி (ரூ. 76,026 கோடி), எல்ஐசி (ரூ. 57,453 கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ. 54,208 கோடி) மற்றும் டிசிஎஸ் (ரூ. 49,210 கோடி) போன்ற பெரு நிறுவனங்களும் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவற்றுடன் இந்தியன் ஆயில் (ரூ. 42,096 கோடி), ஓஎன்ஜிசி (ரூ. 41,424 கோடி) மற்றும் வோடபோன் ஐடியா (ரூ. 34,552 கோடி) உள்ளிட்ட நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு லாபத்தைப் பெற்று இந்த நிதி ஆண்டின் வெற்றிகரமான நிறுவனங்களாக வலம்வருகின்றன.