அதிமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பல்பாக்கி சி. கிருஷ்ணன் என்பவரை தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இவர் தற்போது சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
மேலும் 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் பல உறுப்பினர்கள் நீக்கப்படுவதும் புதிய உறுப்பினர்களுக்கு பதவி வழங்கப்படுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது தன்னுடைய சொந்த மாவட்டத்திலேயே முக்கிய நிர்வாகியை இபிஎஸ் தூக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது செங்கோட்டையன் முன்னிலையில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் நேற்று இணைந்ததால் தற்போது அவரை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
