தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்ற போதிலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் ஆளுநர் மாளிகை பதவி ஏற்பை தாமதப்படுத்துகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் தற்போது தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைந்த நிலையில் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடத்திலும் நடிகர் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இன்று அந்த கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிப்பு மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்காக ஆன்லைன் மூலம் நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பின்னரே என்னால் முடிவை அறிவிக்க முடியும் இன்று மாலை முடிவை சொல்கிறேன் என்று கூறினார். மேலும் இதன் காரணமாக இன்று மாலை கொள் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்பாரா இல்லை தடை தொடருமா என்ற விடை கிடைத்துவிடும்.