சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்ட நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1320 ரூபாய் வரையில் குறைந்து 90080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11260 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 12283 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98264 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து புதிய உச்சமாக ஒரு கிராம் 180 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 180000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.