கோவை அவினாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறப்பு விழா, உலக புத்தொழில் மாநாடு, அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு, தங்க நகை தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நேற்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 2.10 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் பயணிகள் விமானத்தில் ஏறினார். அதே விமானத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பயணம் செய்தார்.

அப்போது விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் அண்ணாமலையும் திடீரென சந்தித்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரின் சந்திப்பு அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் அரசியலில் திமுக மற்றும் பாஜக எதிரிகளாக இருக்கும் நிலையில் திடீரென இவர்கள் இருவரும் சந்தித்தபோது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.