திருச்சியில் நடிகர் விஜய் அவர்கள் நடத்திய அரசியல் பிரச்சார கூட்டம், தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானபோது பெரும் TRP சாதனையைப் பதிவு செய்துள்ளது.

தகவலின்படி, அந்த நிகழ்ச்சியை நாடுமுழுவதும் சுமார் 3.30 கோடி பேர் கூட்டு கணக்கில் (cumulative) பார்த்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல சேனல்கள் ஒரே நேரத்தில் ஒளிபரப்பிய அந்த காட்சிகள், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஊடக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, இந்த TRP அளவுகள் முன்னாள் முதல்வர் செல்வி ஜே. ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரங்களுக்குப் பிறகு இதுவரை எவருக்கும் கிடைக்காத அளவுக்கு மிகுந்த உயர்வாக உள்ளது.

“>

 

விஜய்யின் அரசியல் வரவேற்பு மிக வேகமாக வளர்ந்து வருவதாக ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். “ஜெயலலிதா அம்மாவை ரசித்த அதே கூட்டம் இன்று தளபதி விஜய்யை ரசிக்கிறது, இதுவே 2026 தேர்தலில் தளபதியின் ஆட்சிக்கு சாட்சி” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, #ThalapathyVijay மற்றும் #TrichyRally என்ற ஹாஷ்டாக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி, வருகின்றனர்.