தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் (விஜய் தலைமையிலான கட்சி) இணையும் வாய்ப்பு குறித்து தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்ற செய்தி தற்போது பரவலாக பேசப்படுகிறது.

கரூர் பிரச்சனைக்கு அடுத்த நாளிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல கூட்டங்களில், “தமிழக வெற்றி கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தால் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி உறுதி” என மறைமுகமாகக் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசியதாகவும், “கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது, பிள்ளையார் சுழி போட்டு விட்டோம்” என சில கூட்டங்களில் கூறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“>

 

இந்நிலையில், தமிழக வெற்றி கழக தரப்பிலும் இதற்கான விளக்கங்கள் வெளியாகி வருகின்றன. ஒரு அரசியல் விமர்சகர், “அதிமுக–தமிழக வெற்றி கழக கூட்டணி நடைபெற வேண்டும் என்றால் இரண்டு முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒன்று — அது தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணியாக இருக்க வேண்டும்; இரண்டு — அதிமுக பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து கூட்டணியில் இருக்க கூடாது..

இது நடந்தால் அதிமுக–தமிழக வெற்றி கழக கூட்டணி உருவாகி, அது தமிழக அரசியலில் மிகப் பெரிய பக்கபலமாக அமையும்” எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.