
ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே மினி லாரி ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
அதன் பிறகு விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.