ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ஜேசிபி எந்திரம் மூலம் அழிக்க திட்டமிட்டு போலீசார் அதனை அடுக்கி வைத்திருந்தனர்.
அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த மது பிரியர்கள் ஒவ்வொருவராக மது பாட்டில்களை தூக்கி சென்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#WATCH – Andhra cops line up liquor bottles for disposal, locals grab and run off.#AndhraPradesh #Police #Liquor #LiquorBottles #Viral #ViralVideo pic.twitter.com/ItRHeGhHw6
— TIMES NOW (@TimesNow) September 10, 2024
