கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த துயரமான சூழ்நிலையில், அதே நிகழ்வில் மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரப்புரை நடைபெற்ற இடத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கௌதமை அடையாளம் தெரியாத தவெக தொண்டர்கள் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விஜயின் கூட்டநெரிசல் விவகாரத்தில் தொடர்ச்சியாக எதிர்மறையான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வழக்கு மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
