தமிழகத்தில் பரவலாக பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மாநகரிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.