தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களிலும் நிலவரத்தை ஆய்வு செய்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.