வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னத்தின் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் வழக்கம் போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, மழைக்கால வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
