சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 105,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
