சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தையே உறையச் செய்யும் வகையில் உள்ளது. கேமராவில் பதிவான அந்த சில வினாடி காட்சிகள், ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் காட்சியை போல இருக்கிறது.

அந்த வீடியோவின் தொடக்கத்தில், பிங்க் நிற டீ-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்த இளம் பெண் ஒருவர் ஆழமில்லாத ஒரு குளக்கரையில் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவோ அல்லது சற்று மனதை அமைதிப்படுத்தவோ அவர் அந்தத் தண்ணீருக்குள் மெல்ல இறங்குகிறார்.

ஆரம்பத்தில் முழங்கால் அளவுக்கு நின்ற அவர், அதன்பிறகு தண்ணீரில் சம்மணமிட்டு அமர்கிறார். சிறிது நேரத்தில் எவ்வித பயமும் சந்தேகமும் இன்றி, தன் உடலைத் தளர்த்தி தண்ணீருக்குள் சுலபமாகப் படுத்துக்கொள்கிறார். தனது முகத்தில் எந்தவித டென்ஷனும் இன்றி அந்தத் தருணத்தை அவர் முழுமையாக ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது தன் அருகே என்ன மாதிரியான கொடூர ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குச் சிறிதும் தெரிந்திருக்கவில்லை.

 

அமைதியாக இருந்த தண்ணீர் திடீரென கொந்தளிக்கத் தொடங்குகிறது. அடுத்த கணமே, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பிரம்மாண்டமான முதலை தண்ணீருக்குள் இருந்து பாய்ந்து வெளியே வருகிறது. அந்தப் பெண் படுத்திருந்த திசையை நோக்கி, தன் பிரம்மாண்டமான வாயைப் பிளந்தவாறு அது கொடூரமாகப் பாய்ந்தது. இந்தத் தாக்குதல் கண் இமைக்கும் நேரத்தில், வெறும் சில நொடிகளுக்குள் கதைகளைப் போல அதிவேகமாக நடக்கிறது.

திடீரென ஏற்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் உறைந்துபோன அந்தப் பெண், உடனடியாக சுதாரித்துக்கொண்டு உயிர் பிழைக்க அலறியடித்துக்கொண்டு கை-கால்களை உதறுகிறார். இருப்பினும் பதற்றத்தோடு அங்கிருந்து எப்படியோ சமாளித்து அவசரமாகக் கரையை நோக்கி ஓடுகிறார்.

அதிர்ஷ்டவசமாக, முதலையின் தாக்குதல் அந்தப் பெண்ணின் கால்களுக்கு அருகில் சில அங்குல இடைவெளியில் தவறுகிறது. ஒரு விநாடி தாமதித்திருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிர் போயிருக்கும் என்றே சொல்லலாம். மொத்த நிகழ்வும் வெறும் 10 முதல் 15 நொடிகளுக்குள் நடந்து முடிந்தாலும், அதைப் பார்க்கும் எவருக்கும் நெஞ்சம் படபடக்கும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.