தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்களிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக  தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் கூறியதன் பேரில்தான் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகவும் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டியதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி ஆகியோர் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வர நீதிபதிகள் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு வழங்கினர்.