தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், பொன்ராஜ் தனது கட்சியின் பெண் நிர்வாகிகளைக் மிகவும் அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசி வருவதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக மகளிரை மிகவும் மோசமாக விமர்சித்து வரும் பொன்ராஜ் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தீவிர அரசியல் பணிகளில் இறங்கியுள்ள நிலையில், திமுக ஆதரவாளர் மீது அவர் டிஜிபி அலுவலகத்தில் நேரடியாகப் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இந்தத் திடீர் ஆக்ஷன், அரசியல் ரீதியாக திமுக-வுக்குச் செக் வைக்கும் முயற்சியா? அல்லது பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுகளுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கையா? என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.