தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான ஆட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.

இந்த பலமான எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, தவெக தலைவர் விஜய் அவர்கள் மீண்டும் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

இம்முறை தனி ஆளாகச் செல்லாமல், தனது கூட்டணி கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆதரவு கடிதத்தை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஆளுநரின் அழைப்புக்காகக் காத்திருந்த தவெகவினர், இப்போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அனைத்து ஆவணங்களுடன் தயாராகிவிட்டதால், இன்னும் சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.