அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.30 உயர்ந்து ₹90க்கும், கிலோவிற்கு ₹1,300 உயர்ந்து ₹90,000க்கும் விற்கப்படுகிறது.