ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (அக். 29) அதிரடியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 உயர்ந்துள்ளது .

இந்த விலை உயர்வினால்  22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை, ரூ.11,210-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் புதிய விலை ரூ.86,680 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்ந்த  நிலையில், வெள்ளியின் விலை ரூ.1  உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.166 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,66,000 என்றும் இன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.