தொடர் மழை காரணமாக விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் வீணாகி, முளைத்ததைப் போலவே, மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என நடிகர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு அரசியல் களத்திற்கு வந்த விஜய், அறிக்கை வாயிலாக ஆளும் திமுக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். தொடர் மழையால் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைத் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது? என விஜய் சாடியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) October 28, 2025
“>
மேலும், ஏழை விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கும் நிலையில், வெற்று விளம்பரத்திற்காக “நானும் டெல்டாக்காரன்” என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமை பேசி வருவதாகவும் விஜய் விமர்சித்துள்ளார். விஜய்யின் அறிக்கைக்குப் பிறகு தவெகவினர் மீண்டும் சமூக ஊடகங்களில் (SM-ல்) தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் வாழ்வாதாரம்:
விவசாயிகள் தாங்கள் காலங்காலமாகச் செய்து வரும் உழவுத் தொழில் மூலமே விளைவித்த பொருட்களை விற்று அதைப் பணமாக்கித் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும் என்றால் அதற்கு முழு மூலதனம் என்பது விவசாயமும் அதற்கான உழைப்பும் மட்டுமே! ஆனால், இந்த ஆண்டு மட்டுமல்லாமல் ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை நீடிப்பதாக நடிகர் விஜய் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் புகார் குறித்து தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
