அண்மையில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது தொடர்பாக, ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், அங்கு நடந்தவை குறித்துத் தனித்தனியாகச் சந்தித்தவர்கள் பேட்டியளித்து வருகின்றனர்.

அந்தப் பேட்டிகளின் மூலம் கிடைத்த தகவல்கள், நடிகர் விஜய்க்கு உடல்நல பாதிப்பு உள்ளதோ என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. ஆறுதல் கூறச் சென்றபோது, விஜய் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாகவும், சில பாதிக்கப்பட்டவர்கள் காலில் விஜய்  விழுந்து கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கப் பரப்புரைக்கு வந்தபோது இருந்ததைவிட, நடிகர் விஜய் உடல் மெலிந்து காணப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். முக்கிய நிகழ்வுகளில் கூடப் புகைப்படம் வெளியாகாத நிலையில், விஜய்யின் இந்த உடல்நலக் குறைபாடு குறித்த தகவல் அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், விஜய்யின் தரப்பிலிருந்து அவரது உடல்நலம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.