தமிழக அரசின் 2025 மற்றும் 2026-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதில் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், திருவள்ளுவர் விருது சத்தியவேல் முருகனாருக்கும் வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்ச் சமூகத்திற்காகப் பாடுபட்ட சான்றோர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விவரம் பின்வருமாறு:
விருதாளர்கள் பட்டியல்:
| விருது | விருதாளர் பெயர் |
| திருவள்ளுவர் விருது (2026) | தவத்திரு சத்தியவேல் முருகனார் |
| பேரறிஞர் அண்ணா விருது | அமைச்சர் துரைமுருகன் |
| தந்தை பெரியார் விருது | வழக்கறிஞர் அருள்மொழி |
| அண்ணல் அம்பேத்கர் விருது | சிந்தனை செல்வன் (விசிக எம்.எல்.ஏ.) |
| பெருந்தலைவர் காமராசர் விருது | எஸ்.எம். இதயத்துல்லா |
| மகாகவி பாரதியார் விருது | கவிஞர் நெல்லை ஜெயந்தா |
| பாவேந்தர் பாரதிதாசன் விருது | கவிஞர் யுகபாரதி |
| தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது | வெ. இறையன்பு (முன்னாள் தலைமைச் செயலாளர்) |
| முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது | சு. செல்லப்பா |
| முத்தமிழறிஞர் கலைஞர் விருது | விடுதலை விரும்பி |
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சான்றோர்கள் அனைவருக்கும், வரும் ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளையும், விருதுத் தொகையையும் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கவிஞர் யுகபாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் உள்ளிட்ட ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
