அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி. இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் சீனாவுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய நிலையில் தற்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இவருக்கு அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் சிறுநீரகத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.