தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 6 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுகவுக்கு 4 வேட்பாளர்களும் அதிமுகவுக்கு 2 வேட்பாளர்களும் கிடைப்பார்கள். இந்த நிலையில் திமுக கட்சியில் தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 2 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியில் 2 மாநிலங்களவை சீட் இருக்கும் நிலையில் அதில் ஒன்று பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் நிலையில் வேட்பமனு தாக்கல் செய்வதற்காக அவரது மனைவி சௌமியா அன்புமணியுடன் தலைமை செயலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். மேலும் மீதமுள்ள ஒரு மாநிலங்களவை தொகுதியில் அதிமுகவை போட்டியிடும் என்றும் மீண்டும் தம்பிதுரைக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.