தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 6 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுகவுக்கு 4 வேட்பாளர்களும் அதிமுகவுக்கு 2 வேட்பாளர்களும் கிடைப்பார்கள். இந்த நிலையில் திமுக கட்சியில் தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 2 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

இந்த நிலையில் தற்போது தேமுதிக கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அந்த கட்சியின் பொருளாளர் எல்.கே சதீஷ் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடுவார் என பிரேமலதா விஜய்காந்த் அறிவித்தார். இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து பிரார்த்தனை செய்த எல்.கே. சுரேஷ் இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலகம் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும் முன்னதாக காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்