அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாள் அவகாசம் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அதிமுக உள்நிலையிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.