அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனவும், அதற்காக 10 நாள் அவகாசம்…  எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார். இதனால் அதிமுகவில் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்நிலையில், இன்று (செப். 6) திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையில், செங்கோட்டையன் பேச்சு குறித்து விரிவான விவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, “செங்கோட்டையன் வைத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது” என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வருங்காலத்தில் கட்சிக்குள் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.