சென்னையில் தங்க விலை ஏற்றத்துடன், வெள்ளி விலையும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136க்கு விற்பனையான நிலையில், இன்று (செப்.6) ரூ.2 அதிகரித்து ரூ.138க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ.1,38,000க்கும் விற்பனையாகிறது.

இதேசமயம், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,005க்கும், ஒரு சவரன் ரூ.80,040க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை நடைமுறை மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டதால், விற்பனை அதிகரித்துள்ளதாக வணிக வளாகங்கள் தெரிவித்துள்ளன.