இந்தியாவின் ‘ககன்’ (GAGAN) செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடந்த ஜூன் 27-ஆம் தேதி அன்று இண்டிகோ ஏ320 (INDIGO A320) பயணிகள் விமானம் உதய்பூர் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரைஇறக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடிச் சாதனை சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பெருமையையும் அனல் பறக்கும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது.

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தரைவழி ரேடியோ கருவிகளின் உதவிகளைச் சார்ந்து இருக்காமல், முழுக்க முழுக்க சாட்டிலைட் சிக்னல் (Satellite Signal) எனப்படும் செயற்கைக்கோள் சமிக்ஞை மூலம் மட்டுமே ஒரு பயணிகள் விமானம் இந்தியாவில் தரைஇறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.