உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணறில் விழுந்தான். இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரபடுத்தப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஹாபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது குழந்தை, NDRF குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை உயிருடன் மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதற்கிடையே உத்தரபிரதேசம் | 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சிறுவனை மீட்கும் பணியில் NDRF குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 மணி நேரமாகிறது. அவருக்கு உணவு அனுப்பப்படுகிறது என்று ஹாபூர் எஸ்பி தீபக் புகர் தெரிவித்திருந்தார்..