
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்கு மோடி வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனால நீங்க எந்தவித ஒரு சலிப்போ, ஒரு சலனமோ வேண்டாம். நடுநிலை வாக்காளர்கள் தவறாக இருக்கிறார்கள். பிஜேபி எந்த பக்கம் போகுதோ அந்த பக்கம் நானும் போவேன் என்று மக்கள் தயாரான பிறகு, பிஜேபி எதுக்குங்கய்யா இன்னொருதரு பக்கம் போக வேண்டும்.
பிஜேபி எந்த பக்கம் போகுதோ, அந்த பக்கம் நான் போகணும் என நடுநிலை வாக்காளர்கள் தயாராக இருக்கும் போது…. நாம எதுக்கு இன்னொருத்தர் பக்கம் போகணும். நடுநிலை வாக்காளர்கள் தயாராக இருக்கின்றார்கள். என்னோட ஓட்டு மோடிக்கு. மோடிக்கு என்னுடைய ஓட்டு இருக்கும் போது பிஜேபி எங்க போகுதோ அங்க நான் போறேன். அய்யா 150 தொகுதிகளை தாண்டி இருக்கிறது நம்முடைய யாத்திரை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8,000இல் இருந்து 12,000 பேரை பார்க்கின்றோம்.
இப்போ மூன்று தொகுதி போய் கிட்டு இருக்கின்றோம். குறைந்தபட்சம் 2000, 3000 பேரிடம் பேசுகிறோம். ஐயா தென் தமிழகத்தில் ஆரம்பித்து முதல் தொகுதியாக ராமேஸ்வரம்…. 25வது தொகுதியாக கோயில்பட்டி….. 50ஆவது தொகுதியாக கம்பம்….. 75வது தொகுதியாக மேட்டுப்பாளையம்……. 100ஆவது தொகுதியாக ஸ்ரீரங்கம்…… 125ஆவது தொகுதியாக கும்பகோணம்…….. 150 ஓசூர் எல்லாம் பார்த்தாச்சு ஐயா…… தமிழகத்தை முழுமையாக இந்த யாத்திரை ஒரு படம் பிடித்து காட்டி இருக்கிறது. நான் உங்களுக்கு உறுதியா, தெளிவா சொல்றேன்…. தமிழக மக்கள் மோடியின் பக்கம் தெளிவா இருக்குறாங்க, அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை. நிறைய பேர் நினைப்பாங்க…..
பாரதிய ஜனதா கட்சிக்கு ஓவர் கான்பிடன்ஸ், அதனாலதான் ஓவரா அவங்க சொல்லிக்கிறாங்க…. ஐயா மக்கள் மாறிட்டாங்க, தெளிவா இருக்காங்க…. மோடி வேண்டும் என்று இருக்காங்க. யாருக்கும் பதில் சொல்லி உங்க நேரத்தை விரையம் பண்ணாதீங்க. ட்விட்டர்ல நான் பதில் கொடுத்தேன். அவன் என்னை திட்டி இருக்கான். நான் போய் பதில் கொடுத்தேன் என்பது தேவையில்லை. அந்த நேரத்துக்கு ரெண்டு வீடு ஏறி இறங்கணும். ரெண்டு பேர் கிட்ட உட்கார்ந்து பேசிட்டு வாங்க. அவர்களை மோடி அவர்களுக்கு வாக்கு செலுத்துவதற்கு மாத்திட்டு வாங்க. அதுவே இந்த கட்சிக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும் என்று சொல்கின்றேன் என தெரிவித்தார்.