செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சுவரிலே தாமரை சின்னம் வரையக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார். இந்த தாமரை சின்னத்தை வரைகின்ற  இந்த இலக்கு என்பது,  ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடங்களில் தாமரை சின்னங்கள் வரையப்பட வேண்டும் என்பது கட்சிக் கொடுத்திருக்கின்ற இலக்கு.

இவை இல்லாமல் ஒவ்வொரு இடங்களிலும் டிஜிட்டல் வாயிலாக கூட தாமரை சின்னத்தை பிரபலப்படுத்த வேண்டும் என கட்சி முடிவு செய்து இருக்கிறது. தேசிய தலைவர் துவங்கி வைத்த இந்த பிரச்சார இயக்கத்தை நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிர்வாகிகளும் முன்னெடுத்திருக்கிறோம்.

ஒரு பூத்திலே ஐந்து தாமரைச்சின்னங்கள் வரைவது என்பது கட்சியினராலேயே வரையப்படும். இது தேசிய தலைவர் அவரே வந்து வரைந்து தொடங்கி வைத்திருக்கிறார். கட்சியில் இருக்கின்ற அத்தனை நிர்வாகிகளும் அவர்களாக  முன்னின்று சுவரிலே  வரைந்திருக்கிறார்கள் என்றால்,  இது கட்சியினர் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பது கட்சியினுடைய எதிர்பார்ப்பு.

அதிகமான இடங்களில் பூத்திருக்கு ஐந்து என்பது….  அதிகமான இடங்களில் கூட போட்டி போட்டுக்கொண்டு கட்சியில் உடைய நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கோவை தெற்கு தொகுதிகளிலே இந்த தாமரை சின்னம் வரைகின்ற பிரச்சாரத்தை தொகுதியினுடைய எம்எல்ஏ என்கின்ற முறையில் நான் துவங்கி வைத்திருக்கிறேன் என்று இதற்கு பின்பாகம் ஒவ்வொரு இடங்களிலேயும் கட்சியினுடைய நிர்வாகிகள்  இந்த சின்னத்தை வரைகின்ற பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.