பிக்பாஸ் சீசன்-6 பைனல் இன்று நடந்து முடிந்துள்ளது. பைனலிஸ்ட்டாக விக்ரமன், அஸீம் மற்றும் ஷிவின் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார். இதையடுத்து விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை கமல் அறிவித்தார். அதாவது, அஸீம் கையை தூக்கி வெற்றியாளராக அறிவித்தார் கமல்.

இந்த மகிழ்ச்சியை அஸீம் வெறித்தனமாக கொண்டாடினார். ரன்னராக வந்த விக்ரமன் அறம் வெல்லும் என மட்டும் அதிருப்தி உடன் கூறினார். டைட்டில் வெற்றி பெற்ற அஸீமுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு ஒரு மாருதி சுஸுகி Brezza கார் ஒன்றும் அஸீமுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அக்காரின் டாப் எண்டு மாடல் விலையானது 16 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.