வாரிசு, துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை காட்டிலும் துணிவு படம் நல்ல வசூலை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஓரிரு கோடிகள் வித்தியாசம் இருந்தாலும், வெளிநாட்டில் வாரிசு, துணிவு படத்தை காட்டிலும் அதிக கோடிகள் வித்தியாசத்தில் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டில் வாரிசு படமானது ரூபாய்.75 கோடி வரை வசூல் குவித்துள்ளது. எனினும் இதுவரையிலும் லாபத்தை கொடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் ரூபாய். 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரும் துணிவு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது எனவும் இதற்கு முன்பு வெளியான அனைத்து அஜித் படத்தின் வசூல் சாதனையை துணிவு படத்தின் வசூல் முறியடித்து உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதுதான் அஜித்தின் திரை பயணத்தில் ஆல்டைம் பெஸ்ட் வசூல் என கூறப்படுகிறது.