ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பான ‘அவதார்-2’ இந்தியாவில் சாதனை படைத்து வருகிறது.   கடந்த டிசம்பர் 16-ல் வெளியான அவதார்- தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 16,000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் ஃபோர்ஸ் அவேகன்ஸ், அவதார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் மட்டுமே 16,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. தற்போது இந்த பட்டியலில் அவதார்-2 படமும் இணைந்துள்ளது. இதன் மூலம் ‘அவெஞ்சர்ஸ்: தி எண்ட்கேம்’ சாதனையை முறியடித்து புதிய தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.