ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஆசிர்வதித்தார். இந்த திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி பங்கேற்றார்.

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாக அவர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றார். அவர் பதிவில் கூறியுள்ளதாவது, பிரீ ப்ரொடெக்ஷன் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக படத்தில் வேலை செய்யப் போவதில்லை. எதிர்காலத்தில் அனைத்து போஸ்டர்களில் இருந்தும் எனது பெயரை நீக்குமாறு லைக்கா நிறுவனம் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-டம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்.