சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8560 ரூபாய் வரையில் கூடியுள்ளது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் ஆறு சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதன் எதிரொலியாக இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8,560 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,23,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,34,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று ஒரே நாளில் 30 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும்  ஒரு கிலோ வெள்ளி 330000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.