தமிழகச் சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசிய விசிக (VCK) உறுப்பினர் வன்னிஅரசு, அதிரடியான அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்தார்.
“தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சியை எக்காரணம் கொண்டும் கொண்டு வரத் துடிக்கும் பாஜக-வின் செயல் திட்டத்தைத் தடுக்கவே, தவெக அரசுக்கு விசிக தனது முழு ஆதரவை வழங்குகிறது” என அவர் முழங்கினார்.
மேலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்த அரசு மிக உறுதியாகச் செயல்பட வேண்டும் என்றும், 5 ஆண்டுகளை இந்த அரசு வெற்றிகரமாக நிறைவு செய்யும் என நம்புவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
