தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசிய ஐயுஎம்எல் (IUML) உறுப்பினர் ஷாஜகான், அதிரடியான ஆதரவை அறிவித்துள்ளார்.

“பாஜக-வின் சித்து விளையாட்டுகளில் தமிழ்நாடு சிக்கிவிடக் கூடாது என்பதே எங்களது முதன்மையான நோக்கம்; அதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என அவர் முழங்கினார். மேலும், முந்தைய திமுக ஆட்சி செயல்படுத்திய சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் தங்குதடையின்றித் தொடர வேண்டும் என்றும், மாநில உரிமைகளை நிலைநாட்ட இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.