சென்னையில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.