இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, 20,000 லிருந்து 50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மணமகன் /மகள் ஆடை, அரை சவரன் தங்கம், இருவீட்டா தரப்பில் 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.