கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பாரத்கள் மதுபான விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த பார்களை திறக்க கூடாது. அன்றைய தினம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தாலோ, உத்தரவை மீறி கடைகளை திறந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.