தேனி மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ராஜா தோப்புப்பட்டியில் இருந்து பத்திரகாளிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலிமரத்துப்பட்டி- பத்திரகாளிபுரம் சாலையில் தனியார் தோட்டம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டர் ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.