மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சாலையில் காவலர் பகவத் பிரசாத் பாண்டே என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சாலையில் வந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை காவலர் மடக்கிய நிலையில் “கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் என்னிடம் 3வது முறையாக மாட்டிக்கொண்டீர்கள். கண்ணாடி இல்லாமல் இப்படி ஆட்டோ ஓட்டுவது தவறு. எப்போது கண்ணாடியை சரி செய்வீர்கள்? என்று பாட்டு பாடி கொண்டு கேட்டார். அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் வெட்கத்தில் சிரித்த நிலையில் “கண்ணாடியை மாற்றுவதற்கு குவாலியர் வரை செல்ல வேண்டும். குவாலியர் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது” என்று கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhagwat Prasad Pandey (@bhagwat_prasad_pandey)

 

இதைத்தொடர்ந்து காவலர் பாண்டே பர்சாத்ல் என்னும் இந்தி திரைப்படத்தில் உள்ள ஹம்கோ சிர்ஃப் தும்சே என்ற பாடலை ஆட்டோ ஓட்டுனரை எச்சரிக்கும் வகையில் பாடிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அனைவரும் காவலரின் செயலைபாராட்டி வருகிறார்கள்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை இது போன்ற முறையில் அணுகுவதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வைக்க முடியும். மேலும் காவலர் பாண்டேவின் தனித்துவமான கையாளுதல் அனைவரது மனதையும் கவர்ந்துள்ள நிலையில் இணையத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.