ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது. 292 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது.  91 ரன்களுக்கு 7 விக்கெட் பறிகொடுத்து திணறிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியை மேக்ஸ்வெல் தனது அதிரடி இரட்டை சதத்தின் மூலம் மீட்டெடுத்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 293 அடித்தது. மேக்ஸ்வெல் ஆட்டம் இழக்காமல் 201 ரன் குவித்தார். 128 பந்துகளை சந்தித்த அவர் 21 பவுண்டரி 10 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.