தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயிலலாம்.

இந்நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான நாளை நடைபெற இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு விண்ணப்பசாலைகளுடன் பெற்றோர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.